சென்னை: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா கடந்த சில மாதங்களாக கோயில்களுக்குச் சென்று வழி பட்டு வருகிறார். அந்த வகையில் அவர் பழனி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். வேளச்சேரி எம்எல்ஏவும் நடிக ருமான வாகை சந்திரசேகர் இல் லத் திருமண விழாவில் பங்கேற் பதற்காக ஸ்டாலின் மனைவி துர்காவும் அவரது சகோதரி ஜெயந்தியும் பழனி வந்திருந்தனர். அப்போது அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் இரு வரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 8.00 மணி யளவில் பழனி மலைக்கோயி லுக்கு ரோப்கார் மூலம் வந்து முருகனை ராஜ அலங்காரத்தில் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குடும்பத்தினர் பெயரில் அவர் அர்ச்சனை செய்ததாகவும் கூறப் படுகிறது. கோயிலில் பக்தர்கள் சிலர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் போகர், கைலாசநாதர் சன்னதிகளுக்குச் சென்று துர்கா ஸ்டாலின் வழிபட்டார். அப்போது திமுக பிரமுகர்கள் சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், மெர்சி செந்தில்குமார், இந்திரா திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர். பகுத்தறிவு நம்பிக்கைக் கொண்ட குடும்பத்தில் இருந் தாலும் துர்கா ஸ்டாலின் கோயில் களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
பழனி முருகன் கோயிலில் வழிபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். அருகில் அவரது சகோதரி ஜெயந்தி. படம்: தமிழக ஊடகம்

