டி20 பந்தடிப்பு தரவரிசை: பாபர் ஆசம் முதலிடம்

டி20 பந்தடிப்பு தரவரிசை: பாபர் ஆசம் முதலிடம்

1 mins read

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்தடிப் பாளரான பாபர் ஆசம் ஐசிசியின் டி20 கிரிக்கெட் பந்தடிப்பு தரவரி சையில் முதல் இடத்தைப் பிடித் துள்ளார். நியூசிலாந்து = பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அண்மையில் முடிவடைந்த இந்தத் தொடரில் பாகிஸ்தான் 2=1 எனத் தொடரைக் கைப்பற்றியது. இதில் பாபர் ஆசம் 109 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பாபர் ஆசம் 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச் இரண்டாவது இடத்திலும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.