இறுதிப் போட்டியில் இந்தியா; சுருண்டது பாகிஸ்தான் அணி

இறுதிப் போட்டியில் இந்தியா; சுருண்டது பாகிஸ்தான் அணி

1 mins read
76c28dde-190d-467a-b816-df432249c60b
-

வெலிங்டன்: 19 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை அது 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பூவா தலையாவில் வென்ற இந்தியா முதலில் பந்தடித்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் டுகள் இழப்புக்கு 272 ஓட்டங்களை அது குவித்தது. சுப்மன் கில் அபாரமாக விளையாடி 102 ஓட்டங்கள் குவித்தார். பிரித்வி ஷா 41 ஓட்டங்களும் மஞ்ஜோத் கல்ரா 47 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அர்ஷத் இக்பால் 3 விக்கெட்டு களும் முகம்மது மூசா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 273 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்திலிருந்தே தடுமாறி யது. தொடக்க ஆட்டக்காரர்கள் முகம்மது ஷாயிப் ஆலம் 7 ஓட்டங்களும் இம்ரான் ஷா 2 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தனர். இவர்கள் இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறியதற்கு இந்தியாவின் இஷான் போரலின் அபாரப் பந்துவீச்சு காரணம். அடுத்து வந்த அலி ஷர்யப் ஆசிஃப் (1), அமாத் ஆலம் (4) ஆகியோரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார் போரல்.

பாகிஸ்தானின் விக்கெட்டைக் கைப்பற்றிக் கொண்டாடும் இந்தியாவின் சுப்மன் கில். படம்: ஏஎஃப்பி