மான்செஸ்டர்: ஸ்பானிய காற் பந்துக் குழுவான அட்லெடிக் பில் பாவ்வின் பிரெஞ்சு, தற்காப்பு வீரருமான 23 வயது அய்மெரிக் லபோர்ட்டேவை 57 மில்லியன் பவுண்டுக்கு மான் செஸ்டர் சிட்டி வாங்கியுள்ளது. இதன் மூலம் லபோர்ட்டே, மான் செஸ்டர் சிட்டி குழுவின் ஆக விலையுர்ந்த வீரராவார். கடந்த பருவம் முடிவடைந்தது முதல் தற்காப்பு, கோல் காப்பாளர் களை வாங்குவதற்காக 215.15 மில்லியன் பவுண்டு செலவழித்து உள்ளார் கார்டியோலா. இதற்கிடையே செல்சி, 23 வயது எமர்சன் பல்மியரியை 17.6 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் செல்சி வீரர் மிச்சி பட்சூவய்யை மீதமிருக்கும் பருவத் திற்குக் கடனாகப் பெற்றுக்கொள்ள டோர்மண்ட் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.

