அதிர்ச்சியில் ஆர்சனல்

அதிர்ச்சியில் ஆர்சனல்

1 mins read

சுவான்சி: ஆர்சனல் காற்பந்துக் குழுவை அதிர்ச்சித் தோல்வி அடைய செய்த சுவான்சி, பிரிமியர் லீக் பட்டியலின் 'ரெலிகேஷன்' நிலையில் இருந்து தப்பி 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுவான்சியின் சொந்த மண் ணில் நடந்த இந்த ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார் ஆர்சனலின் மொன்ரி யால். அதுவே அக்குழுவின் ஒரே கோலாகவும் அமைந்துவிட்டது. சுவான்சியின் சேம் குளுகஸ் அடுத்த நிமிடமே சமன் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 1-1 எனச் சம நிலையில் முடிந்தது.

பிற்பாதி ஆட்டத்தில் இன்னு மொரு கோலைப் போட்டு சுவான்சி முன்னிலை பெற்றது. சுவான்சியின் ஜோர்டன் அயூ கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை ஆர் சனலின் கோல்காப்பாளர் பீட்டர் செக் தடுக்கத் தவறியதால் அந்தப் பந்து கோலானது. ஆனால் அதை ஆர்சனல் சமன் செய்வதற்குள் இன்னோர் கோலைப் போட்டு சுவான்சியின் வெற்றியை உறுதி செய்தார் குளுகஸ். புதிய நிர்வாகியின் கீழ் கடைசி 8 ஆட்டங்களில் சுவான்சி ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்தது. கடந்த வாரம் லிவர்பூலையும் 1-0 என சுவான்சி வீழ்த்தியது.