டிவில்லியர்ஸ் விலகல்

1 mins read

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்று போட் டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள் ளது. இதற்கிடையே இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து தென்னாப் பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் விலகி உள்ளார். இவ்வணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியின்போது டிவில்லியர்ஸின் வலது கை ஆட் காட்டி விரலைப் பந்து கடுமையா கப் பதம் பார்த்தது. இது குண மடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அவர் விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே 14 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து கயா சோண்டோ இன்றைய ஆட் டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் விளையாடினாலும் பந் தடிப்பாளர் டிவில்லியர்ஸ் இல்லா தது அக்குழுவிற்குப் பின்னடைவே ஆகும்.