வெற்றிப் பயணம் தொடர விருப்பம்

வெற்றிப் பயணம் தொடர விருப்பம்

1 mins read
77eb291b-d043-4483-a092-c5a3d6c43e9b
-

டர்பன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட் டியில் கிட்டிய வெற்றியை ஊக்கமாகக் கொண்டு தொடர்ந்து வெற்றி பெற விரும்புகிறோம் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார். டெஸ்ட் தொடரை 2=1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. டர்பன் கிங்ஸ்மீட் விளையாட் டரங்கில் நேற்று முன்தினம் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென் றது. முதலில் பந்தடித்த தென்னாப் பிரிக்க அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை எடுத்தது. அதிக பட்சமாக டு பிளஸ்ஸி 120 ஓட்டங்களை விளாசினார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியின் ஓட்டக்குவிப்பைக் கட்டுப்படுத்தினர். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும் யுஸ் வேந்திர சகல் இரு விக்கெட்டு களையும் கைப்பற்றினர். அடுத்துப் பந்தடித்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 20 ஓட்டங்களுடன் மோர்கல் பந்துவீச்சில் வெளியேறி னார். சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த இன்னொரு தொடக்க வீரர் ‌ஷிகர் தவான், கோஹ்லியின் தவறான கணிப்பு காரணமாக 35 ஓட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக 'ரன் அவுட்' ஆனார். அப்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 67.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி