காற்பந்து வீரரை உதைத்த நடுவருக்கு மூன்று மாதத் தடை

காற்பந்து வீரரை உதைத்த நடுவருக்கு மூன்று மாதத் தடை

1 mins read

பாரிஸ்: ஆட்டத்தின்போது காற்பந்து வீரரை உதைத்த நடுவருக்கு மூன்று மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 14ஆம் தேதி பிஎஸ்ஜி - நான்டெஸ் குழுக்கள் பிரெஞ்சு லீக் ஆட்டமொன்றில் மோதின. அப்போட்டியின்போது நான்டெஸ் வீரர் டியேகோ கார்லோஸ் பந்தைத் தடுக்க ஓடியபோது எதிர்பாராவிதமாக நடுவர் டோனி சேப்ரனின் காலை இடறிவிட, நடுவர் கீழே விழுந்தார். அந்த கோபத்தில் கார்லோசை உதைத்த சேப்ரன், மஞ்சள் அட்டை காட்டியும் அவரை எச்சரித்தார். ஏற்கெனவே ஒருமுறை மஞ்சள் அட்டை பெற்றிருந்ததால் கார்லோஸ் திடலைவிட்டு வெளியேற நேரிட்டது.