லண்டன்: உடல்நலக் குறைவு காரணமாக ஆர்சனலின் புதிய வரவான பியர் எமரிக் ஒபமெயாங், எவர்ட்டனுக்கு எதிராக இன்று பின்னிரவில் நடைபெறும் இங்கி லிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட் டத்தில் விளையாடுவது கேள்விக் குறியாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவாக $104 மில்லியன் விலைகொடுத்து பொருஸியா டோர்ட்மண்ட் குழு விடம் இருந்து அண்மையில் ஒப மெயாங்கை வாங்கியது ஆர்சனல். மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து அண்மையில் ஆர்சன லுக்கு இடம் மாறிய ஹென்ரிக் மிகிதார்யானும் ஒபமெயாங்கும் ஒரு காலத்தில் டோர்ட்மண்ட் குழுவிற்காக இணைந்து ஆடிய வர்கள். இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
அத்துடன், நம்பிக்கை நட்சத் திரமான மெசுட் ஓசில் மேலும் மூன்றரை ஆண்டுகள் ஆர்சன லுக்காக விளையாட ஒப்புக் கொண்டிருப்பதும் அக்குழுவிற் குப் புதிய நம்பிக்கையை அளித் திருக்கிறது. மறுமுனையில், உச்ச ஆட்டத் திறனுடன் இருக்கிறார் எவர்ட்டன் வீரர் தியோ வால்காட். கடந்த 12 ஆண்டுகளாக ஆர்சனலுக்காக விளையாடிய இவர் அண்மையில் தான் எவர்ட்டனுக்கு மாறினார். நாளை நள்ளிரவு நடக்கவுள்ள முக்கியமான ஆட்டத்தில் ஸ்பர்ஸ் - லிவர்பூல் குழுக்கள் மோதவுள் ளன. லிவர்பூலை வீழ்த்தும்பட்சத் தில் ஸ்பர்ஸ் முதல் நான்கு இடங் களுக்குள் வந்துவிடும்.

