வெலிங்டன்: பத்தொன்பது வய துக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி நான்காவது முறை யாகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. நியூசிலாந்தின் மவுண்ட் மாங்க னூயியில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ் திரேலிய அணியை எதிர்கொள் கிறது. இரு அணிகளும் மோதிய முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 100 ஓட்ட வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதனால் அதே போன்றதொரு செயல்பாட்டை இன்று திரும்பவும் நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை யுடன் இந்திய அணி இருக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கு கொண்ட இந்தத் தொடரில் தோல் வியைச் சந்திக்காத ஒரே அணி இந்தியாதான்.
சுப்மன் கில் போன்ற நிலைத்து ஆடக்கூடிய பந்தடிப்பாளர்கள், மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணிகளுக்கு மிரட்ட லாகத் திகழ்ந்துவரும் கமலேஷ் நாகர்கோட்டி போன்ற பந்துவீச்சா ளர்கள், அபிஷேக் சர்மா, அனுகுல் ராய் போன்ற 'ஆல்ரவுண்டர்'கள் என இந்திய அணி பெரும் பலத் துடன் உள்ளது.

