நான்காவது முறையாக கிண்ணம் வென்ற இந்தியா

நான்காவது முறையாக கிண்ணம் வென்ற இந்தியா

2 mins read
19ab11f7-6024-4ada-8e1b-bbe4f60b5321
-

வெலிங்டன்: 19 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்தக் கிண்ணத்தை இந்தியா ஏந்துவது இது நான்காவது முறை. 12வது ஜூனியர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்தில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் அரையிறுதியில் இந்தியா 203 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் பாகிஸ்தானையும் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ் தானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலி யாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா அணித் தலைவர் ஜேசன் சங்கா பந்தடிப்பைத் தேர்வு செய்தார். ஜோனதன் மெர்லோ 76 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந் தனர்.

ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 216 ஓட்டங்கள் எடுத்து. இந்திய தரப்பில் போரெல், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சிவம் மவி ஒரு விக்கெட்டைச் சாய்த்தார். இதையடுத்து, 217 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அணித் தலைவர் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார்கள். பிரித்வி ஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மன் ஜோத் கல்ரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்துடன் கொண்டாடும் இளம் இந்திய வீரர்கள். படம்: ஏஎஃப்பி