லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் லிவர்பூலும் ஸ்பர்ஸ் குழுவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. இரு குழுக்களும் லீக் போட்டி யை முதல் நான்கு இடங்களில் முடித்து அடுத்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றன. லிவர்பூல் தற்போது லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்பர்ஸ் குழு லிவர்பூலை விட இரண்டு புள்ளிகள் குறை வாகப் பெற்று லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
"இது மிகவும் முக்கியமான ஆட்டம். எங்கள் இலக்கு என்ன என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்," என்று லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப் தெரிவித்துள்ளார். அண்மைய காலங்களில் இரு குழுக்களும் சில ஆட்டங்களில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் இரு குழுக்களின் செயல்பாடு சீராக இல்லை. சில ஆட்டங்களில் வெற்றி பெறுவதும் வேறு சில ஆட்டங்களில் தோல்வி யைத் தழுவுவதும் வழக்கமாகி விட்டது. இதுவே இவற்றின் பலவீனம் எனக் கருதப்படுகிறது.

