டிராவிட்: இளம் அணி வீரர்கள் இன்னும் நிறைய சாதிப்பார்கள்

டிராவிட்: இளம் அணி வீரர்கள் இன்னும் நிறைய சாதிப்பார்கள்

1 mins read

ஆக்லாந்து: இந்தியாவின் இளம் கிரிக்கெட் அணியினர் இன்னும் நிறைய சாதிப்பார்கள் என 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளரும் முன் னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்திய இளையர் அணியின் வெற்றிக்கு டிராவிட் ஒரு முக்கிய காரணம் என்று ஷேவாக் உட்பட பல முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் சமூகமும் பாராட்டு தெரிவித்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் கொடுக்க முன்வந்த ஒப்பந்தத்தை நிரா கரித்துவிட்டு தேசிய இளையர் அணியை மேம்படுத்த பயிற்று விப்பாளர் பொறுப்பை ஏற்றவர் டிராவிட்.

இந்நிலையில் நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட் டோருக்கான உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலி யாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியாளர் பட்டம் வென்றது. "நமது அணி வீரர்கள் களத்தில் எடுத்த முயற்சிகளை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். மறக்க முடியாத இந்த வெற்றி, வீரர்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த ஒரு நினைவு களுடன் வீரர்கள் ஓய்ந்து விடமாட்டார்கள். எதிர்காலத்தில் இன்னும் நிறைய மறக்க முடியாத வெற்றிகளை அவர்கள் கொண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று டிராவிட் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.