மீண்டும் வெற்றிப் பாதையில் ஆர்சனல், யுனைடெட்

மீண்டும் வெற்றிப் பாதையில் ஆர்சனல், யுனைடெட்

1 mins read
55c1c7cb-004d-40b1-9b1f-d6be4d9fb3c0
-
Google News Preferred Icon

லண்டன்: கடந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய ஆர்சனல் குழு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சுவான்சீ குழுவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது ஆர்சனல் குழு. அந்தத் தோல் வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவைப் பந்தாடியது ஆர்சனல். எவர்ட்டன் குழுவை 5=1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக் கம் முதலே தாக்குதல்களை முடுக் கிவிட்டது ஆர்சனல் குழு. ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே கோல் மழையைத் தொடங்கினார் ஆர்சனலில் ஆரன் ரேம்சே. பின்பு 14ஆம் நிமிடத்தில் கொஷெல்னி ஒரு கோல் போட மீண்டும் தனது இரண்டாவது கோலைப் போட்டார் ரேம்சே.

ஆர்சனல் குழுவின் புதிய ஆட்டக்காரரான ஒபொமெயாங் ஆர்சனலில் நான்காவது கோலைப் போட்டார். அவருக்குப் பந்தை லாவகமாகக் கொடுத்து கோல் போடும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிலிருந்து ஆர்சனலுக்கு வந்த ஹென்ரிக் மிக்கிட்டாரியான். படம்: ஏஎஃப்பி