தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்த ஸ்பர்ஸ் குழு

தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்த ஸ்பர்ஸ் குழு

1 mins read

லிவர்பூல்: லிவர்பூலுக்கும் ஸ்பர்ஸ் குழுவுக்கும் இடையிலான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நேற்று அதிகாலை நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடின. லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களை எப்படியாவது பிடித்து அடுத்த பருவத்துக்கான சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருதரப்பு ஆட்டக் காரர்களும் கடுமையாகப் போராடி னர்.

ஆட்டம் தொடங்கி மூன்றாவது நிமிடத்திலேயே லிவர்பூல் கோல் போட்டது. ஸ்பர்ஸின் பெனால்டி எல்லைக் குள் அனுப்பப்பட்ட பந்தை நோக்கி விரைந்த முகம்மது சாலா, ஸ்பர்ஸ் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் சேர்த்தார். அதனைத் தொடர்ந்து, இரு குழுக்களும் மாறி மாறி தாக்கு தல்களை நடத்தின. சில சமயங்களில் கோல்காப் பாளர்கள் பந்தைத் தடுத்து நிறுத்தினர். மற்ற சமயங்களில் இரு குழுக்களின் வீரர்களும் இலக்கை நூலிழையில் தவறவிட்டனர்.