இந்திய இளம் வீரர்களுக்கு 30 லட்ச ரூபாய் போதாது

இந்திய இளம் வீரர்களுக்கு 30 லட்ச ரூபாய் போதாது

1 mins read
4a6fd3eb-2329-4215-950c-e9678191da7f
-

மும்பை: 19 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கிண் ணத்தை வென்ற இந்திய இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது எனப் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றியாளர் பட்டம் பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 4 முறை 19 வயதுக்குட்பட்டோருக் கான உலகக் கிண்ணத்தை வென்று முத்திரை பதித்தது. உலகக் கிண்ணத்தை வென்ற பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி மும்பை திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் வீரர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, 19 வயதுக்குட் பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை தொடர்பாக பயிற்றுவிப்பா ளர் ராகுல் டிராவிட் அதிருப்தி அடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்குத் தலா ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. பயிற்றுவிப்பாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும் அவருக்கு உதவி யாக இருந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும் அறிவிக்கப்பட்டது. இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது என்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகையை அறிவித்து இருக்க வேண்டும் என்றும் டிராவிட் அதிருப்தி தெரிவித்த தாகக் கூறப்படுகிறது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றபின் இந்தியாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ராகுல் டிராவிட், பிரித்வி ஷா. படம்: இந்திய ஊடகம்