லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல்சி குழுவின் இரண்டாவது தொடர் தோல்வியால் அதன் நிர்வாகி கோண்டேவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று வாட்ஃபர்ட் குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, நான்காவது இடத்தில் உள்ள செல்சி ஐந்தாம் இடத்தில் உள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைவிட ஒரு புள்ளி மட்டுமே கூடுதலாக வைத்துள்ளது. தோல்விக்குப் பிறகு பேசிய கோண்டே, "நான் எனது வேலையைச் செய்கிறேன்.
என் வேலையில் திருப்தி இல்லை யென்றால் அதைப் பற்றி குழு நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்," என்றார். முன்னதாக வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்திலேயே செல்சி குழு பகயோகாவை இழந் தது. கோல் விழுவதற்கு முன் னதாகவே தனது வீரரை இழந்த செல்சி குழுவால் கடைசி வரை மீண்டெழ முடியவில்லை. பதிலாக கடைசி நேரத்தில் வாட்ஃபர்ட் குழுவிடம் இருந்து வரிசையாக கோல்களை வாங்கிக் கட்டிக்கொண்டது. 42வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலைப் போட்டார் வாட்ஃபர்ட் குழுவின் டெய்னி.
வாட்ஃபர்ட் வீரர் ஜன்மத்°உதைத்த பந்து செல்சி கோல்காப்பாளரைத் தாண்டி கோல் வலைக்குள் சென்றது. படம்: ஏஎஃப்பி

