எட்டு கோல்களை போட்டு தெறிக்கவிட்ட சுவான்சி

எட்டு கோல்களை போட்டு தெறிக்கவிட்ட சுவான்சி

2 mins read

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற் பந்து வரலாற்றில் தனது ஆகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து உள்ளது சுவான்சி சிட்டி குழு. நேற்று அதிகாலை நடந்த நான்காம் சுற்று மறுஆட்டத்தில் சுவான்சி 8=1 என்ற கோல் கணக் கில் நாட்ஸ் கவுன்டி குழுவை நசுக்கிப் பிழிந்தது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த அக்குழு, அண்மையில் லிவர்பூல், ஆர்சனல் என்ற இரு முன்னணிக் குழுக்களை வீழ்த்தி, 'ரெலிகேஷன்' எனப்படும் அடுத்த பருவத்திற்கான தகுதியிழப்பு நிலையில் இருந்து முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இன்னோர் ஆட்டத்தில், இபி எல்லில் தடுமாறி வரும் ஹடர்ஸ் ஃபீல்ட் குழு 4=1 என்ற கோல் கணக்கில் இரண்டாம் நிலைக் குழுவான பர்மிங்ஹமை வென்றது. ஐந்தாவது சுற்றில் சுவான்சி, ஷெஃபீல்ட் வென்ஸ்டேவுடனும் ஹடர்ஸ்ஃபீல்ட், மான்செஸ்டர் யுனைடெட்டுடனும் மோதவுள்ளன. மேக்ஸ்வெல் மிரட்டலில் பணிந்தது இங்கிலாந்து ஹோபார்ட்: பந்துவீச்சிலும் பந்த டிப்பிலும் கிளென் மேக்ஸ்வெல் மிரட்ட, முத்தரப்பு டி20 கிரிக் கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை ருசித்தது ஆஸ்தி ரேலிய அணி. நியூசிலாந்து, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் டி20 தொடர் ஆஸ் திரேலியாவில் நடந்துவருகிறது.

முதல் ஆட்டத்தில் நியூசி லாந்தை மிக எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா, இரண்டாவது ஆட்டத்தில் நேற்று இங்கிலாந் துடன் மோதியது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களை எடுத்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 28 ஓட்டங்களைச் சேர்க்க மேலும் ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 50 ஓட்டங்களைக் குவித்தார். மேக்ஸ்வெல் மூன்று விக்கெட் டுகளைக் கைப்பற்றினார்.

இலக்கை விரட்டிய ஆஸ்தி ரேலிய அணியில் மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியே றியபோதும் இறுதி வரை களத் தில் நின்று மேக்ஸ்வெல் 103 ஓட்டங்களை விளாசினார். இத னால் ஒன்பது பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஐந்து விக் கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியா வெற்றி பெற்றது. இவ்விரண்டு அணிகளும் நாளை மறுநாள் மீண்டும் மோத இருக்கின்றன.