சிந்து வென்றும் தோல்வி அடைந்த இந்தியா

சிந்து வென்றும் தோல்வி அடைந்த இந்தியா

1 mins read
e210fea3-61b8-4dde-8262-6de14ed58c87
-

அலோர் ஸ்டார்: மலேசியாவில் நடைபெறும் ஆசியப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ணப் போட்டி யில் ஜப்பானிய மகளிரிடம் இந்திய வீராங்கனையர் தோல்வி அடைந்தனர். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21=15 என்ற நேர் செட்களில் அகானே யமகுச்சியைத் தோற் கடித்தார். இரண்டாவது ஆட்டத் தில் இந்தியாவின் கிருஷ்ண பிரியா, ஜப்பானின் சட்டோ சயாகாவிடம் 21-12, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். மற்றோர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா 21-14, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்ந் தார்.

அடுத்த இரண்டு இரட்டை யர் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. இதன் விளைவாக 4-1 எனும் புள்ளிக்கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்தபோதிலும் இந்திய அணி புள்ளி அடிப் படையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.