கோஹ்லிக்குப் புகழாரம் சூட்டிய மியாண்டட்

கோஹ்லிக்குப் புகழாரம் சூட்டிய மியாண்டட்

1 mins read

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த வெற்றின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 3=0 எனும் கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் சதத்தாலும் சுழற்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா வின் ஆதிக்கம் நீடிக்கிறது. முதலில் பந்தடித்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்கள் குவித்தது.

கோஹ்லி 159 பந்துகளில் 160 ஓட்டங்கள் குவித்து (12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவான் 63 பந்துகளில் 76 ஓட்டங்கள் (12 பவுண்டரிகள்) எடுத்தார். டுமினி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபாரமான சுழற்பந்து வீச்சால் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 40 ஓவர்களில் 179 ஓட்டங்கள் எடுத்து சுருண்டது. டுமினி அதிகபட்சமாக 51 ஓட்டங்கள் எடுத்தார். குல்தீப், சகல் தலா 4 விக்கெட்டுகளும் பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.