லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஐந்தாவது சுற்றுக்கு ஸ்பர்ஸ் குழு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் நான்காவது நிலை லீக்கில் விளையாடும் நியூபோர்ட் கவுன்டியை அது எளிதில் தோற்கடித்தது. இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான நான்காவது சுற்றின் முதல் ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் நியூபோர்ட் குழு முன்னிலை வகித்தது. ஆட்டம் முடியும் கட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவுக்காக ஹேரி கேன் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இதன் விளைவாக இவ்விரு குழுக்களும் மீண்டும் மோதும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நியூபோர்ட்டின் டேன் பட்லர் போட்ட சொந்த கோல் அக்குழு வுக்குப் பேரிடியாக அமைந்தது.
எதிரணி சோகத்தில் வாட, ஸ்பர்ஸின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் எரிக் லமேலா (நடுவில்). படம்: ஏஎஃப்பி

