லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்ட பெருநிறுவன வரிச் சீர்திருத்தங்களால் 2017 டிசம்பருடன் முடிந்த கால் ஆண்டில் 29 மில்லியன் பவுண்டு (S$53.8 மி.) இழப்பு ஏற்பட்டதாக மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது. இருந்தாலும், உலகின் பணக்காரக் காற்பந்துக் குழுவான யுனைடெட்டின் ஒலிபரப்பு வருமானம் 17.3%, அதாவது 61.6 மி. பவுண்டாக உயர்ந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக்கிற்கு அக்குழு திரும்பியதே இதற்குக் காரணம். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்ற கால் ஆண்டில் யுனைடெட்டின் மொத்த வருமானம் கிட்டத்தட்ட 4% கூடி, 163.9 மி. பவுண்டு என்றானது.
டிரம்ப்பால் யுனைடெட்டுக்கு வருவாய் இழப்பு
1 mins read

