ஒரே கொடியின்கீழ் அணிவகுத்த இரு கொரிய நாடுகளின் விளையாட்டாளர்கள்

ஒரே கொடியின்கீழ் அணிவகுத்த இரு கொரிய நாடுகளின் விளையாட்டாளர்கள்

1 mins read
8bc60a50-dcf0-4179-b140-55ee04af4434
-

தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கின. தொடக்க விழாவில் தென்கொரிய, வடகொரிய விளையாட்டாளர்கள் அனைவரும் கொரிய ஒருங்கிணைப்புக் கொடியை ஏந்தி ஒருசேர அணிவகுத்தனர். அப்போது வடகொரிய பேரவைத் தலைவர் கிம் யோங் நாம், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் ஆகியோருடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மொத்தம் 17 நாட்கள், 13 அரங்குகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதுமிருந்தும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள், 15 விளையாட்டுகளில் 102 பதக்கங்களுக்காக மோதவுள்ளனர். கிட்டத்தட்ட 77%, அதாவது 826,000 நுழைவுச்சீட்டுகள் ஏற்கெனவே விற்றுவிட்டன. 18 வயதான சிங்கப்பூர் வீராங்கனை செயென் கோ 1,500 மீ. விரைவுப் பனிச்சறுக்குப் போட்டியில் கலந்துகொள்கிறார். சிங்கப்பூர் சார்பில் கலந்துகொள்ளும் ஒரே விளையாட்டாளர் இவர்தான். படம்: ராய்ட்டர்ஸ்