மிர்பூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இடதுகை பந்து வீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரமிடமிருந்து தட்டிப் பறித்துள்ளார் இலங்கை சுழற் பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத், 39. பங்ளாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஹெராத் நான்கு விக்கெட்டுகளைக் கைப் பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரது விக்கெட் வேட்டை 415ஆக உயர்ந்தது. முன்னதாக, வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆக அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த இடதுகை பந்துவீச்சாளர் களாகத் திகழ்ந்தார்.
இதற்கிடையே, ஹெராத்துடன் இணைந்து அறிமுக வீரர் அகிலா தனஞ்செயாவும் விக்கெட்டுகளை அள்ள, இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணி 215 ஓட்ட வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி 1=0 என்ற கணக்கில் வென்றது. சிட்டகாங்கில் நடந்த முதல் ஆட் டம் 'டிரா'வில் முடிந்தது.

