அலோர் ஸ்டார்: மலேசியாவில் நடைபெறும் ஆசியக் கிண்ணப் பூப்பந்து போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் சீனாவின் ஷி யூகியும் மோதினர். இதில் 14=21, 21=16, 21=7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதன்பின் நடைபெற்ற இரட் டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி= சிராஜ் செட்டி ஜோடியும் சீனாவின் ஹி ஜிட்டிங்டா-ன் யாங் ஜோடியும் மோதின.
இதில் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் சீன ஜோடி வெற்றி பெற்றது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையானது. தொடர்ந்து நடை பெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத்தும் சீனாவின் கியாவோ பின்னும் விளையாடினர். இப் போட்டியில், 9-21, 21-11, 21-17 செட்களில் சீன வீரர் வென்றார். இதன்மூலம் சீனா 2-1 என முன்னிலை பெற்றது. மற்றோர் இரட்டையர் ஆட்டத் தில் இந்தியாவின் மனு அட்ரி= சுமீத் ரெட்டி ஜோடி சீனாவின் ஹான் செங்காய்- சோ ஹவுடங் ஜோடியிடம் 14-21, 21-19, 21-14 என்ற செட்களில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் சீன அணி 3-1 என வெற்றி பெற்றது. இதனால் இந்தியா ஆண்கள் அணி இத்தொடரைவிட்டு வெளி யேறியது.

