தொடர்ந்து போராடுவோம்: சூளுரைக்கும் மேன்யூ

தொடர்ந்து போராடுவோம்: சூளுரைக்கும் மேன்யூ

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான் செஸ்டர் யுனைடெட்டும் நியூ காசலும் இன்றிரவு மோதுகின்றன. இந்த ஆட்டம் நியூகாசலின் செயிண்ட் ஜேம்சஸ் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. லீக் பட்டியலின் முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி ஒய்யாரமாக வீற்றிருக்கும் வேளையில் இரண் டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் யுனைடெட் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகக் களமிறங்க முடியாமல் தவித்து வரும் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச் குணமடைந்து வருவதாகவும் அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என்றும் பேசப் படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓல்ட் டிராஃபர்ட் விளை யாட்டரங்கத்தில் நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளை யாடினார். அந்த ஆட்டத்தில் யுனைடெட் 4=1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. "இரண்டு நாட்களுக்கு முன்பு சக வீரர்களுடன் இணைந்து இப்ராஹிமோவிச் பயிற்சி செய்யத் தொடங்கினார். அவரது உடற் திறன் மேம்பட்டு வருகிறது," என்று யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்தார். இன்றைய ஆட்டத்தில் விளை யாட இப்ராஹிமோவிச் ஒருவேளை தயாராக இருந்தாலும்கூட, மொரின்யோ அவரை உடனடி யாகக் களமிறக்கமாட்டார் என்றும் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு நிலைமை மோசமாவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.