வின்சென்ட் சுப்ரமணியத்திற்கு புதிய பொறுப்பு

வின்சென்ட் சுப்ரமணியத்திற்கு புதிய பொறுப்பு

1 mins read

தேசிய காற்பந்துக் குழுவுக்கு முன்னாள் பயிற்றுவிப்பாளராக இருந்த வின்சென்ட் சுப்ரமணியத் திற்கு இனி ஒரு புதிய பொறுப்பு. சிங்கப்பூர் காற்பந்து சங்கம், காற்பந்து பயிற்றுவிப்பாளர் களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை அவருக்குத் தந்துள்ளது. தேசிய இளையர் பிரிவு, எஸ்=லீக் இளையர் பிரிவு, பள்ளிக் காற்பந்து பயிலகம் மற்றும் காற்பந்து மேம்பாட்டு நிலைய பயிற்றுவிப்பாளர்களைக் கண்காணிக்கும் பணிகளிலும் அவர் ஈடுபடுவார். லீக்கில் இடம்பெறும் பயிற்று விப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் அதே வேளையில், சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நடத்தும் பயிற்றுவிப்பாளர் கற்றல் பயணத்திலும் அவர் பங்குபெறுவார் என்று கூறப் படுகிறது.