ஸ்மித்துக்கு 'ஆலன் பார்டர்' விருது

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் 'ஆலன் பார்டர்' என்னும் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா மெல்பர்ன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைசிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதைப் பெற்றார்.