லண்டன்: லண்ட ன் ஸ்டாம் ஃபோர் டில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ப்ரோம் விச் அணியுடன் போராடி செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் எடென் ஹாஸர்ட், விக்டர் மோசஸ் ஆகிய வீரர்கள் ஆளுக்கொரு கோல் போட்டு செல்சியின் வெற் றிக்கு வழிவகுத்தனர். எடென் ஹாஸர்ட் இரண்டு கோல்களையும் மோசஸ் ஒரு கோலையும் போட் டனர். சாம்பியன்ஸ் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளைச் சந்தித்த செல்சி அணிக்குக் கிடைத்த இந்த வெற்றி அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டோனியோ கோன்டேவுக்கு பெரும் மகிழ்ச்சி- யைத் தந்துள்ளது.
ஆட்டம் தொடங்கி சரியாக 25வது நிமிடத்தில் செல்சியின் ஹாஸர்ட் தனது ஆட்டத்தில் விறுவிறுப்பைக் காட்டி ஒரு கோல் போட்டார். பிரிமியர் லீக்கின் ஆறு ஆட்டங்களில் ஹாஸர்ட் ஆறு கோல்களைப் போட்டுள்ளார். செல்சி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. செல்சி விளையாடிய 27 ஆட்டங்களில் மொத்தம் 53 புள்ளிகளைப் பெற்று டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி யைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணிக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
லண்ட ன் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ப்ரோம் விச் அணியின் ஜிகார்சுடன் (இடது) மல்லுக்கட்டும் செல்சி அணியின் எடென் ஹாஸர்ட். படம்: ராய்ட்டர்ஸ்

