அநாகரிக நடத்தைக்காக ரபாடாவிற்கு ஐசிசி அபராதம்

அநாகரிக நடத்தைக்காக ரபாடாவிற்கு ஐசிசி அபராதம்

1 mins read

போர்ட் எலிசபெத்: தென்னாப்பி ரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டாளர் ‌ஷிகர் தவானை ஆட்டமிழக்கச்செய்த தென்னாப் பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா அநாகரிகமான முறையில் தவானை நோக்கிக் கை அசைத்து வெளியேறும்படி கூறியதற்காக அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் நடத்தை விதிமுறை களை மீறும் வகையில் ரபாடா வின் செயல் இருந்ததால் அவ ருக்கு இந்தப் போட்டியின் ஊதி யத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ரபாடாவிற்கு ஏற்கெனவே நான்கு புள்ளிகள் இருந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.