இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம்

இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம்

1 mins read

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா விற்கு எதிரான ஆறாவது கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் நடைபெறு கிறது. இதுவரை விளையாடிய இந்தத் தொடரின் ஐந்து ஒருநாள் போட்டி களில் இந்தியா நான்கில் வெற்றி கண்டு தொடரை வென்றுள்ளது. இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றியை சுவைக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்திய வீரர் களே அடித்துள்ளனர். சொந்த மண்ணில் விளையாடிய போதும் தோல்வி அடைந்துள்ள தென்னாப் பிரிக்க அணி நெருக்கடியிலுள்ளது.