செஞ்சுரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகை சூடியது. செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் கைப்பற்றி இந்திய அணி சாதனைகளையும் படைத்தது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அந்த அணியின் மார்க்ரம், ஆம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். தென் னாப்பிரிக்க அணி 23 ஓட்டங் களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. ஆம்லா 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டோனி 'கேட்ச்' சாதனை ஷர்துல் தாக்குர் வீசிய பந்தை ஆம்லா அடிக்க, அதை இந்திய விக்கெட்காப்பாளர் டோனி 'கேட்ச்' செய்து அவரை ஆட்ட மிழக்கச் செய்தார். இது அனைத் துலக கிரிக்கெட் போட்டிகளில் டோனியின் 600வது 'கேட்ச்' ஆகும். இதுவரை அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் டோனி 774 விக்கெட்டுகள் வீழ்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். இதில் 600 'கேட்ச்'களும் 174 'ஸ்டெம்பிங்'களும் அடங்கும். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மார்க்ரம் 30 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளி யேறினார்.
சதம் அடித்துக் கொண்டாடும் விராத் கோஹ்லி (வலது). படம்: ஏஎஃப்பி

