இமாலய இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா சாதனை

இமாலய இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா சாதனை

1 mins read

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 244 ஓட்ட இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக் லாந்தில் நடைபெற்ற ஐந்தாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இரண் டாவது முறையாக மோதின. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்தடித்தது அதன்படி மார்ட்டின் கப்டில், கொளன் மன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். இருவரும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை முறியடித்து ஓட்டங்களைக் குவித்தனர்.