தோகா: கத்தார் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பெட்ரா கிவிடோவா தகுதி பெற்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் கிவிடோவா, முதல் இடத்தில் இருக்கும் டென் மார்க்கின் கரோலின் வோஸ்னி யாகியை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என வோஸ்னியாகி கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண் டாவது செட்டை கிவிடோவா 7-6 எனப் போராடி கைப் பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட்டை கிவிடோவா 7-5 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 7-6, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற கிவிடோவா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

