வெளுத்துக்கட்டிய பார்சிலோனா

வெளுத்துக்கட்டிய பார்சிலோனா

1 mins read
01c13ce4-1d60-42f9-aaa0-2579acf31f26
-

ஐபார்: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் பார்சிலோனா சக்கைப்போடு போட்டு வரு கிறது. 24 ஆட்டங்கள் விளையாடி 62 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் அது முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் அட்லெட்டிகோ மட்ரிட்டைவிட பார்சிலோனா கூடுதலாகப் பத்து புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐபார் குழுவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தை 2-0 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா கைப்பற்றியது.

ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே பார்சிலோனா வின் முதல் கோல் புகுந்தது. மெஸ்ஸி கொடுத்த பந்தைத் தமது கட்டுக்குள் கொண்டு வந்த லுவிஸ் சுவாரேஸ், ஐபாரின் கோல்காப்பாளரைக் கடந்து சென்று பந்தை வலைக்குள் சேர்த்தார். இந்த கோல் போடும் வாய்ப்பை உருவாக்கித் தந்த பெருமை மெஸ்ஸியைச் சேரும். இம்மாதிரி அவர் 147 வாய்ப்பு களை உருவாக்கித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஐபாரின் ஃபேபியன் ஒரேல்லானாவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

ஐபாரின் கோல்காப்பாளரைக் கடந்து சென்று பந்தை வலைக்குள் சேர்க்கும் பார்சிலோனாவின் லுவிஸ் சுவாரேஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்