கோஹ்லி: கூட்டு முயற்சியே வெற்றிக்கு வழிவிட்டது

கோஹ்லி: கூட்டு முயற்சியே வெற்றிக்கு வழிவிட்டது

2 mins read

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்- காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜோகனஸ்பர்க் கில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் தவான் 39 பந்தில் 72 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய தென் னாப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்- களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 28 ஓட்டங்கள் வித்தியா- சத் தில் வென்றது. ஹென்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 70 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), பெகருதீன் 39 ஓட்டமும் எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 24 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்- கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜெய்- தேவ், ஹார்த்திக் பாண்டியா, சஹால் தலா 1 விக்கெட் கைப்- பற்றினர். வெற்றி குறித்து கூறிய கோஹ்லி, "கூட்டு முயற்சியே வெற்றிக்கு வழிவிட்டது. பந்தடிப்- பாளர்களும், பந்து வீச்சாளர்களும் ஒருங்கிணைந்து சமபலத்துடன் செயல்பட்டனர்," என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் பந்தடிப்பது எளிதாக இருந்தது. தவானும் ரோகித்தும் பந்தடிப்பதில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மிகவும் சிறப்- பாகச் செயல்பட்டார். ஒட்டுமொத்த வீரர்களின் ஆட்டமும் நன்றாக இருந்தது. நான் பேட்டிங்கில் ஒரு ஓட்டம் எடுக்க ஓடியபோது காயம் ஏற்பட்டது," என்றார். இரு அணிகள் மோதும் 2வது 20 ஓவர் ஆட்டம் செஞ்சூரியனில் நாளை 21ஆம் தேதி நடக்கிறது.