குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கினார்

குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கினார்

1 mins read

பியாங்சாங்: தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த 168 வீரர், வீராங்கனைகள் அனைத்துலக ஒலிம்பிக் மன்றக் கொடியின் கீழ் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளிக்- கப்பட்டது. ரஷ்யாவின் கர்லிங் வீர ரான அலெக்சாண்டர் குரூ- ஷெளல் னிட்ச்கி அவரது மனைவி அனஸ்டசியா பிரைசக்லோவா உடன் இணைந்து கடந்த வாரம் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், அலெக்சாண்டர் ஊக்கமருந்து சோதனையில் தோற் றதாக அனைத் துலக ஒலிம்- பிக் குழு தெரி வித் துள்ளது. அவர் மெல்டோனியம் என்ற ஊக்க மருந்து பயன்படுத்திய தெரிய வந்தது.