'மேன்யூ பட்டம் வெல்லும்'

'மேன்யூ பட்டம் வெல்லும்'

1 mins read

செவ்வியா: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் பட்டத்தை வெல்வதற்கான தகுதி மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு உள்ளது என்று கூறி உள்ளார் அதன் நட்சத்திர விளை யாட்டாளர் ஆஷ்லே யங். கடந்த 2013=14ஆம் ஆண் டிற்குப் பிறகு தற்போதுதான் சாம்பியன்ஸ் லீக் தொடரின் 'நாக் அவுட்' சுற்றுக்கு மேன்யூ தகுதி பெற்றுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 3.45 மணிக்கு செவ் வியாவின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் அக் குழுவுடன் மோதுகிறது மேன்யூ. மான்செஸ்டர் குழு தற்காப்பு, தாக்குதல் என இரண்டிலும் சிறந்து விளங்கும் நிலையில் சாம் பியன்ஸ் லீக் பட்டத்தையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரி வித்துள்ளர் ஆஷ்லே யங். இதற்கிடையே பால் போக்பா விற்கும் தனக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய யூகங்கள் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார் மேன்யூ நிர்வாகி மொரின்யோ. "செவ்வியாவின் சொந்த மண் ணில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டம் சற்று கடினமானதே என் றாலும் நாங்கள் பொறுப்போடு விளையாடுவோம்," என்றும் அவர் சொன்னார்.