எஃப்ஏ கிண்ண காற்பந்து: விகனின் காற்பந்து சாகசம்

எஃப்ஏ கிண்ண காற்பந்து: விகனின் காற்பந்து சாகசம்

1 mins read
5fbdba1c-fa04-416d-b14f-6d51abc1148c
-

விகன்: பிரிமியர் லீக் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, லீக் ஒன் எனப்படும் மூன்றாம் நிலை காற்பந்துக் குழு வான விகனிடம் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டி ஒன்றில் தோல் வியைத் தழுவியது. நேற்று அதிகாலை நடந்த இந்தப் போட்டியில் சிட்டி குழு வினர் ஆட்டத்தின் 83 விழுக்காடு நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்ததுடன் விகன் கோல் வலையை நோக்கி 27 தடவைகள் பந்தைத் தட்டிவிட்டனர். ஆனால், அவற்றில் ஐந்து முறை மட்டுமே பந்து கோல் வலைக்கு அருகில் வந்து விகன் அணி அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், பிரிமியர் லீக் போட்டி களில் கடந்த இரண்டு ஆட்டங் களில் எதிரணிகளுக்கு எதிராக ஒன்பது கோல்கள் போட்ட மான்செஸ்டர் சிட்டி விகனுக்கு எதிராகத் தவித்தது பார்க்க பரி தாபமாக இருந்ததாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர் டெல்ஃப்புக்கு சிவப்பு அட்டை காண்பித்து அவரை ஆட்ட மைதானத்திலிருந்து வெளியேற்றினார் நடுவர். படம்: ஏஎஃப்பி