வீகன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்து வீரர் செர்ஜியோ அகுவேரோ, காற்பந்து ரசிகர் ஒருவரை அடிக்க கையோங் கிய குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை பெறாமல் தப்பியுள் ளார். நேற்று முன்தினம் நடந்த எஃப்ஏ கிண்ணக் காற்பந்தாட் டம் ஒன்றில் வீகன் குழுவின் சொந்த மண்ணில் நடந்த ஆட் டத்தில் 1=0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி தோற்றது. இதையடுத்து, வெற்றியைக் கொண்டாடிய வீகன் குழுவின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காற்பந்தாட்ட மைதானத்திற்குள் இறங்கினார்கள்.
அப்போது ரசிகர் ஒருவருக் கும் சிட்டி வீரர் செர்ஜியோ அகுவேரோவுக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டையின்போது ரசிகரை அடிக்க கையோங்கிய அகுவேரோ, உடனடியாக பின் வாங்கியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் தொடர்பில் அகுவேரோவை பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளும் படி கூறிய காற்பந்து சங்கம் அவர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியது. ஆனால், தங்களது ரசிகர் ளைக் கட்டுப்படுத்தத் தவறியது குறித்து வீகன், சிட்டி ஆகிய இரு குழுக்களும் வரும் 26ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காற்பந்துச் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

