செல்சியின் வெற்றியைத் தடுத்த பார்சிலோனா

செல்சியின் வெற்றியைத் தடுத்த பார்சிலோனா

1 mins read
216ec327-8213-43ba-b080-dba7cb23478d
-

லண்டன்: மெஸ்சியின் கோல் பார் சிலோனாவிற்கு எதிரான சாம் பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் செல்சியின் வெற்றியைத் தடுத்தது. 'நாக்-=அவுட்' சுற்றில் செல்சி யின் சொந்த மண்ணில் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது பார்சிலோனா. தொடக்கம் முதலே செல்சி வீரர்களின் அபார ஆட்டம் பார்சிலோனா குழுவை மிரட்டும் விதமாகவே இருந்தது. முற்பாதி ஆட்டத்தில் செல்சி யின் வில்லியன் உதைத்த பந்து இரு முறை எதிரணியின் கோல் வலையை உரசி மட்டுமே சென்றது.

ஆனால் பிற்பாதி நேரத்தின் போது அவர் உதைத்த பந்து கோல் வலைக்குள் செல்ல 62வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டது செல்சி. முன்னிலை பெற்ற செல்சி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதன் இளம் வீரர் கிறிஸ்டின்சென் செய்த தவற் றால் வெற்றி பறிபோனது. தனது சொந்த வலைக்கு அரு கிலேயே கிறிஸ்டின்சென் பந்தை உதைக்க, அந்த வாய்ப்பைச் சரி யாக பயன்படுத்திக் கொண்ட மேன்யூவின் இனியெஸ்டா பந்தை மெஸ்சியிடம் கொடுத்தார். 75வது நிமிடத்தில் மெஸ்சி அதைக் கோலாக்க, ஆட்டம் 1=1 என சமநிலை கண்டது.

செல்சி வீரரிடம் இருந்து பந்தைப் பறிக்க போராடும் பார்சிலோனா வீரர் மெஸ்சி. படம்: ஏஎஃப்பி