மட்ரிட்: நடப்பு வெற்றியாளராக இருந்தபோதும் இந்தப் பருவ ஸ்பானிய லா லீகா தொடரில் சொதப்பி வந்த ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவுக்குச் சற்று நிம்மதி கிட்டியுள்ளது. லெகானெஸ் குழுவிற்கு எதி ராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 3=1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ரியால், பட்டியலின் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாதபோதும் ஆட்டத்தை அக்குழு வென்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் ஆறாவது நிமிடத் திலேயே லெகானெஸ் குழு முன் னிலை பெற்றது. ஆயினும், லூக்கஸ் வாஸ்குவெஸ், கேஸ்மிரோ, செர் ஜியோ ராமோஸ் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலடித்து ரியா லுக்கு வெற்றி தேடித் தந்தனர். இருப்பினும் முதலிடத்தில் உள்ள பார்சிலோனாவைவிட 14 புள்ளிகள் பின்தங்கியுள்ளதால் ரியால் பட்டத் தைத் தக்கவைப்பது சிரமமே!
மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய ரியால் மட்ரிட்
1 mins read

