செவில் (ஸ்பெயின்): கோல்காப்பா ளர் டேவிட் ட கியா அபாரமாகச் செயல்பட்டு எதிரணியின் கோல் முயற்சிகளைத் தவிடுபொடியாக்கி யதால் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு தோல்வியின் பிடி யிலிருந்து தப்பியது. சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று அதிகாலை செவிய்யா - மேன்யூ குழுக்கள் மோதிய காலிறுதிக்கு முந்திய சுற்று முதல் ஆட்டம் 0=0 எனச் சமநிலையில் முடிந்தது. அலெக்சிஸ் சான்செஸ், யுவான் மாட்டா, ரொமேலு லுக்காகு என முன்னணி வீரர்கள் மேன்யூவின் தாக்குதல் வரிசையில் இருந்த போதும் ஆட்டத்தில் செவிய்யா வின் கையே ஓங்கி இருந்தது.
அதிக விலைகொடுத்து வாங் கப்பட்ட பிரெஞ்சு ஆட்டக்காரர் பால் போக்பா உடல்நலம் தேறி விட்டாலும் அவரைத் தேர்வு செய்யாமல் 21 வயதான ஸ்காட் மெக்டாமினேவை மத்தியத் திடல் பகுதியில் களமிறக்கினார் மேன்யூ நிர்வாகி ஜோசே மொரின்யோ. ஆயினும், ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே ஆண்டர் ஹெரேரா காயமடைந்து வெளியேற, போக்பா களம் கண்டார். முதல் பாதியின் இறுதி நிமி டங்களில் செவிய்யாவின் ஸ்டீவன் என்ஸே„ன்ஸி, லூவிஸ் முரியல் ஆகியோரிடமிருந்து வந்த பந்தை அற்புதமாகத் தடுத்தார் ட கியா.
செவிய்யா ஆட்டக்காரர்கள் வலையை நோக்கி பந்தை அனுப்பியபோதெல்லாம் அதை வெற்றிகரமாகத் தடுத்தாடினார் மேன்யூ கோல்காப்பாளர் டேவிட் ட கியா (இடது). படம்: ஏஎஃப்பி

