'பந்துவீச்சாளர்களுக்கும் தலைக்கவசம்'

'பந்துவீச்சாளர்களுக்கும் தலைக்கவசம்'

1 mins read
Google News Preferred Icon

ஆக்லாந்து: கிரிக்கெட் விளையாட் டில் பந்து தாக்கி காயமடைவதைத் தவிர்ப்பதற்கு பந்துவீச்சாளர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட வேண்டும் என வலி யுறுத்தி இருக்கிறார் நியூசிலாந் தைச் சேர்ந்த வாரன் பார்ன்ஸ். அந்நாட்டில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றின்போது, முகக்கவ சத்துடன் கூடிய தலைக்கவசத்தை அணிந்து பந்துவீசியதன் மூலம் பார்ன்ஸ் பரபரப்பாகப் பேசப்பட்டார். அண்மையில், நியூசிலாந்தில் நடந்து வரும் ஃபோர்டு கிண்ணப் போட்டியின்போது பந்தடிப்பாளர் அடித்த பந்து, அதை வீசியவரின் தலையில் பட்டு, எல்லைக்கோட் டைத் தாண்டிச் சென்று விழுந்தது. நல்லவேளையாக பந்துவீச்சாள ருக்கு எந்தக் காயமும் ஏற்பட வில்லை. இதையடுத்து, பந்துவீச்சாளர் களின் பாதுகாப்பிற்கும் விரைவில் சட்ட விதிகள் அமலுக்கு வரும் என நம்புகிறார் பார்ன்ஸ்.