ஆட்டத்தில் தோற்றும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஆர்சனல்

ஆட்டத்தில் தோற்றும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஆர்சனல்

1 mins read
ec5907cb-28ab-4edf-b3ac-144fdaa42cf7
-

லண்டன்: சுவீடனின் ஆஸ்டர் சண்ட்ஸ் காற்பந்துக் குழுவிடம் 2=1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டபோதும் ஆர்சனல் குழு யூரோப்பா லீக்கின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. இவ்விரு குழுக்களுக்கு இடை யிலான முதல் ஆட்டத்தில் 3=0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், சொந்த எமி ரேட்ஸ் விளையாட்டரங்கில் நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் எளிதாக வென்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் ஆர்சனல் களம் இறங்கியது.

ஆனால், அரைமணி நேரத்திற் குள்ளேயே அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அக்குழு வைத் திக்கமுக்காட வைத்தனர் ஆஸ்டர்சண்ட்ஸ் ஆட்டக்காரர்கள். இருந்தபோதும் பிற்பாதி ஆட் டம் தொடங்கியதும் சாட் கொலா சினாச் மூலம் வந்த கோலால் ஆர்சனல் குழு முன்னிலையைக் குறைத்தது. அதன்பின் இரு குழுவினரின் கோல் முயற்சிகள் எதுவும் பலிக்கா ததால் ஆட்டம் 2-1 என்ற கணக் கிலேயே ஆஸ்டர்சண்ட்சுக்குச் சாதகமாக முடிந்தது. இருந்தபோதும் ஒட்டுமொத்த கோல் கணக்கில் 4=2 என முன் னிலை பெற்ற ஆர்சனல் ஐந்தாவது சுற்றுக்குள் நுழைந்தது.<p>

எதிரணி ஆட்டக்காரர் தற்காப்பில் கோட்டைவிட, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் உதைத்து முன்னிலையைக் குறைத்த ஆர்சனல் குழுவின் சாட் கொலாசினாச் (வலது). படம்: ஏஎஃப்பி