இந்தியத் திடல்தட வீரருக்குத் தடை

இந்தியத் திடல்தட வீரருக்குத் தடை

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: 'மெல்டோனியம்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைத் தனது அறையில் வைத்திருந்த காரணத்திற்காக இந்தியத் திடல்தட வீரரான ஜித்தின் பாலுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஜித்தின் பால் போட்டியிட்டு வந்தார். அவர் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மைய வளாகத்தில் இருக்கும் அறையில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான 'மெல்டோனியம்' அவரது அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சோதனை மையத்தில் இது உறுதி செய்யப்பட்டது.