லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான் செஸ்டர் யுனைடெட்டும் செல்சியும் இன்றிரவு மோதுகின்றன. இரு குழுக்களும் லீக் பட்டியலின் முதல் நான்கு இடத் தைப் பிடித்து அடுத்த பருவத் துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்புடன் உள்ளன. இன்று நடைபெறும் ஆட்டம் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெறு கிறது. அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் யுனைடெட்டும் செவியாவும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன. செல்சியும் பார்சிலோனாவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
எனவே, மீண்டும் வெற்றியின் பக்கம் திரும்ப இரு குழுக்களின் நிர்வாகிகளும் அதற்கு ஏற்றாற் போல வியூகங்களை வகுப்பர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பால் போக்பா வுக்கும் யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நட்சத்திர வீரரான போக்பாவை மொரின்யோ தேவையான அள வுக்குக் களமிறக்காததே இதற்குச் சான்று என்று காற்பந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எஃப்ஏ கிண்ணப் போட்டியில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் போக்பா களம் இறங்கவில்லை. அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கூறப் பட்டது. செவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்டர் ஹெரேரா காயமடைந்து ஆட்டத்தைத் தொடர முடியாத நிலையில்தான் மாற்று ஆட்டக்காரராக போக்பா களமிறக்கப்பட்டார். போக்பா மீது பலருக்குக் காழ்ப்புணர்ச்சி இருப்பது போல தோன்றுவதாக யுனைடெட்டின் முன்னாள் வீரர் ஓவன் ஹார் கிரீவ்ஸ் கூறியுள்ளார். "இந்தப் பருவத்தை அவர் மிக அருமையாக தொடங்கி வைத்தார். ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் அவருக்குப் பிரச்சினை ஆரம்பித்தது.
பால் போக்பா (இடது) படம்: ஏஎஃப்பி

