கோஹ்லி, டோனிக்கு ஓய்வு

கோஹ்லி, டோனிக்கு ஓய்வு

1 mins read

மும்பை: இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப் பட்டது. இதில் அணித் தலைவர் விராத் கோஹ்லி, விக்கெட் காப்பாளர் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கவுள்ள இந்திய அணியில் தீபக் ஹூடா, வா‌ஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.