மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற் பந்துத் தொடரில் ரொனால்டோவின் இரட்டை கோல் ரியால் மட்ரிட் குழுவிற்கும் சுவாரெஸின் 'ஹாட் ரிக்' கோல் பார்சிலோனாவிற்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. கிரோனா குழுவிற்கு எதிராக விளையாடிய பார்சிலோனாவின் சுவாரெஸ் மூன்று கோல்கள், மெஸ்ஸி இரண்டு கோல்கள், கொட்டினீயோ ஒரு கோல் என கோல் மழை பொழிந்தனர். இதற்கிடையே கிரோனா குழு ஒரு கோல் மட்டுமே போட, 6-1 என்ற கோல் கணக்கில் பார்சி லோனா வெற்றி பெற்றது. இன்னோர் ஆட்டத்தில் ஆல்வஸ் குழுவை நான்கு கோல் கள் வித்தியாசத்தில் வென்றது ரியால் மட்ரிட்.
லா லீகா: பார்சிலோனா, ரியால் மட்ரிட் கோல் மழை
1 mins read

