கிளோப்: முக்கியமான வெற்றி

கிளோப்: முக்கியமான வெற்றி

1 mins read
512ec155-93f3-4e76-a260-b6f45abb8c89
-

ஆன்ஃபீல்ட்: வெஸ்ட் ஹேம் காற்பந்துக் குழுவிற்கு எதிரான லிவர்பூலின் ஆட்டம் மிகவும் சுவா ரஸ்யமாக இருந்தது என்று கூறி னார் லிவர்பூல் நிர்வாகி கிளோப். இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் லிவர்பூல் குழு பெற்ற வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், "ரசிகர்கள் இம்மாதிரியான ஆட்டத்தைத்தான் காண விரும்பு வார்கள். ஆனால் அதைக் காண் பது என்பது அரிது. "லிவர்பூலின் இன்றைய ஆட் டம் அத்தகைய சுவாரசியமானதாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நாங்கள் தற்காப்பு, தாக்குதல் என இரண்டிலும் சிறந்து விளங் கினோம். எதிர்த்தாக்குதலும் அபா ரமாக இருந்தது. "இபிஎல் போட்டிகளில் இன் னும் பத்து ஆட்டங்களே எஞ்சி உள்ள நிலையில் இந்த வெற்றி முக்கியமான ஒன்று. "நாங்கள் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிப்போமா என்பது மற்ற ஆட்டங்களின் முடிவைப் பொறுத்தே உள்ளது," என்றார். இந்த வெற்றியால் சொந்த மண்ணில் 16வது தொடர் வெற் றியைப் பதிவு செய்தது லிவர்பூல். முற்பாதி ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம், லிவர்பூலின் வெற்றிக்குச் சவாலாக இருந்தது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் வெஸ்ட் ஹேம் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்டார் சாலா. படம்: ஏஎஃப்பி